azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Uttering the truth is easy. But indulging in falsehood is a tortuous process. One has to take a lot of trouble to cover up one lie with more lies. That is why it has been said: "Sathyam brooyath; Priyam brooyath; na brooyath Sathyam Apriyam" (Speak the truth, speak what is pleasing. Do not utter truth that is unpleasant). God is the embodiment of truth. Truth is the foundation of the universe. This truth transcends the mind and speech and is beyond the categories of time and space. You must live up to this truth. You must realise that the Divine is present in everything. Only when you can recognise the omnipresence of the Divine will you be able to experience the Divine.
- BABA
- BABA
உண்மையை உரைப்பது மிகவும் எளிது. பொய்யுரைப்பது தான் கடினமான ஒன்று. ஒரு பொய்யை மறைக்க பல பொய்களைச் சொல்ல வேண்டி, ஒருவர் மிகவும் சிரமப்பட வேண்டும். அதனால் தான் ' சத்தியத்தையே பேசு, இனிமையானதையே பேசு, இனிமையற்ற சத்தியத்தைப் பேசாதிரு ' என்பார்கள். இறைவன் சத்தியத்தின் திருவுருவம். சத்தியமே இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை. இந்த சத்தியம் மனம்,வாக்கு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, இடம் காலம் என்ற பரிமாணங்களையும் தாண்டி நிற்கிறது. நீங்கள் இந்த சத்தியத்திற்கு ஏற்ப நடத்தல் வேண்டும். தெய்வீகம் அனைத்திலும் உறைந்துள்ளது என்பதை உணர வேண்டும். எங்கும் நீக்கமற இறைவன் உள்ளான் என்பதை உணர்ந்தால் தான் உங்களால் தெய்வீகத்தை அனுபவிக்க முடியும்.
- பாபா
- பாபா