azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Vinayaka is the embodiment of intelligence. You will be confronted with many Vighnas (obstacles) in the journey of life. Prayers offered to Ganapathi - who is better known as Vighneswara - will help you by removing such obstacles and minimising impediments. Love is the most important element in life. Through love alone you can unify the world. It is the absence of love that is the cause of hatred. It is this hatred that is undermining human nature. Despite the fact that it is difficult to nourish hatred, while it is easier to foster love, people are engaged in doing what is difficult. From today, give up Swaartha (selfishness); turn your mind towards the Parartha (Supreme), lead a life of Yadaartha (Truth) and sanctify your lives. Place your faith in God and do your duty to the best of your ability. Saturate yourself with love and share it with all. If you earn the love of God even to the slightest extent, you will experience infinite joy.
- BABA
விநாயகர் அறிவாற்றலின் திருவுருவம். உங்களது வாழ்க்கைப் பயணத்தில் பல தடைகளை ( விக்னங்களை) நீங்கள் எதிர் கொள்ள நேரிடலாம். (விக்னேஸ்வரர் என்று போற்றப்படும்) விநாயகருக்குச் செலுத்தும் பிராரர்த்தனைகள் உங்களுக்கு இப்படிப்பட்ட தடைகளை நீக்கியும், அவற்றின் தாக்கத்தைக் குறைத்தும் உதவி புரியும். அன்பு வாழ்க்கையின் மிகச் சிறந்த ஒரு அங்கமாகும். அன்பின் மூலமே, உங்களால் உலகை ஒற்றுமைப் படுத்த இயலும். அன்பின்மையே வெறுப்பிற்குக் காரணம். இந்த வெறுப்புத்தான் மனித இயல்பை குலைக்கிறது. வெறுப்பைப் பேணுவது கடினமாகவும், அன்பை வளர்ப்பது எளிதாகவும் இருந்த போதிலும் மக்கள் கடினமானதைச் செய்வதிலேயே ஈடுபடுகிறார்கள். இன்றிலிருந்து, சுயநலத்தை(ஸ்வார்த்தம்) விடுத்து,மனதை ஒப்புயர்வற்ற நிலையை(பாரார்த்தம்) நோக்கித் திருப்பி, இயல்பான (யதார்த்தம்) வாழ்வு நடத்தி,வாழ்க்கையைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். இறைவன் மீது நம்பிக்கை வைத்து,உங்களால் இயன்ற வரை உங்களது கடமைகளை ஆற்றுங்கள். அன்பில் திளைத்து, அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவனது கருணையை ஒரு சிறிதளவே நீங்கள் பெற்றாலும் அதுவே உங்களுக்கு அளவற்ற ஆனந்தத்தை அளிக்கும்.
- பாபா
- பாபா