azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Islam means surrender to God. Everyone who in a spirit of surrender and dedication, live in peace and harmony in society, do really speaking, belong to Islam. Islam insists on full co-ordination between thought, word and deed. In the month of Ramzan, the fast and the prayers are designed to awaken and manifest this realisation. Ramzan brings together in bonds of love kith and kin, near and far, friend and foe. Whichever may be the religion, its emphasis is on unity, harmony and equal-mindedness. Therefore, cultivate love, tolerance and compassion, and demonstrate the Truth in every daily activity. This is the Message I give you with My Blessings.
'இஸ்லாம்' என்றால் இறைவனுக்குப் பணிவது என்று பொருள். உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவரெல்லாம், சரணாகதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், சமுதாயத்தில் அமைதியுடனும், ஒன்றிணைந்தும் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இஸ்லாத்தில் இருக்கிறார்கள் எனலாம். இஸ்லாம் எண்ணம், சொல், செயல் மூன்றும் முழுமையாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுத்துகிறது. ரமலான் மாதத்தில் மேற்கொள்ளும் நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் இந்தத் தெளிவைத் தட்டி எழுப்பி, வெளிப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப் பட்டவை. ரம்ஜான், உறவினர்கள், சுற்றம் சூழலில் இருப்போர், நண்பர், பகைவர் என்று அனைவரையும் அன்பு வட்டத்தில் கொண்டு வருகிறது. எந்த மதமாக இருந்தாலும், ஒற்றுமை, சமூகத்தில் இணக்கம் மற்றும் சுக துக்கங்களை ஒரே சீராக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. எனவே அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் கருணை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, இந்த உண்மையை தினசரி வாழ்க்கையில் கடைப் பிடித்துக் காட்டுங்கள். இதுதான் நான் என் ஆசியுடன் இன்று உங்களுக்கு அளிக்கும் செய்தியாகும்.