azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop faith in God. All names are His - Rama, Krishna, Christ or any other name. Every man is the embodiment of the Divine. True human relations can grow only when this truth is recognised. The first stage is where you recognise "I am in the Light." Next, when you realise, "The Light is in me," and finally when you realise, "I am the Light." "I" represents love and light represents Jnana (Supreme Wisdom). When love and light become one, there is Realisation. Love should come from within, not be enforced from outside.
இறைவன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ராமா, கிருஷ்ணா, கிருஸ்து, அனைத்து நாமங்களும் அவனுடையதே. ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தின் உள்ளடக்கமே. உண்மையான மனித உறவுகள் இந்த சத்தியத்தை உணர்ந்தால் தான் வளர முடியும். உங்களது முதல் படி ' நான் ஒளியில் உள்ளேன்' என்பது. அதன் பின் நீங்கள் உணர்வது ,' ஒளி என்னுள் உள்ளது ' என்பது. இறுதியில் நீங்கள் அறிந்து கொள்வது,'நானே அந்த ஒளி' என்பது. இவற்றில், ' நான்' என்பது அன்பையும், 'ஒளி' என்பது மிக ஒப்புயர்வற்ற ஞானத்தையும் குறிக்கிறது. அன்பும்,ஒளியும் ஒன்றாகும் போது, தன்னை உணர்தல் என்ற நிலை பிறக்கிறது. அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்பட வேண்டும்; வெளியிலிருந்து வலுக் கட்டாயமாக நடைமுறைப் படுத்த முடியாது.