azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Bhakti (Devotion) occupies the pride of place in Bharathiya culture. Devotion cannot be confined to observances like worship, pilgrimages or going to temples. These are merely actions indicative of devotion. There is a power that provides a basic impulse for these actions. That is the love of God. Bhakti means Paripurna Prema (total love). This love is motiveless. Love based on a motive cannot be real love. As a river seeks to join the ocean by a natural impulse, as a creeper winds itself naturally around a tree to climb upwards, so too is the devotee's love a spontaneous expression of the yearning to realise God, free from worldly desires of any kind. To experience the presence of the Divine, the devotee's love should flow as a pure selfless stream. It should regard the Divine as One that pervades everything. The devotee should practise seeing God in every object in the cosmos and firmly believe that all names and forms are derived from God.
பக்தி என்பது இந்திய கலாசாரத்தில் ஒரு தலை சிறந்த அங்கத்தை வகிக்கிறது. பூஜைகள், புனிதத் தலங்கள் மற்றும் கோவில்களுக்குச் செல்வது போன்றவை மட்டுமே பக்தியில் அடங்காது. இவை யாவும் பக்தி இருப்பதன் அறிகுறிகளே. இந்தச் செயல்களைச் செய்யத் தூண்டும் ஒரு அடிப்படையான சக்தி ஒன்று உள்ளது. அதுவே இறைவன் மீது கொள்ளும் அன்பு. பக்தி என்பது பரிபூரண ப்ரேமை. இந்த அன்பு உள் நோக்கம் அற்றது. உள் நோக்கம் கொண்ட பக்தி உண்மையான பக்தியாக இருக்க முடியாது. எப்படி இயற்கையாகவே ஒரு நதி கடலோடு இணைய விழைகிறதோ, எப்படி ஒரு கொடி மரத்தைச் சுற்றிக் கொண்டு மேலே எழ முயற்சிக்கிறதோ, அதே போல எந்த விதமான உலகியலான ஆசைகள் இன்றி, பக்தனது அன்பு என்பது, இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற வேட்கையின் தானாகவே எழுகின்ற ஒரு வெளிப்பாடாகும்.தெய்வீகத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், பக்தனின் அன்பு சுய நலமின்றி, தூய்மையான,நீரோட்டம் போலப் பாய வேண்டும். தெய்வீகத்தை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகக் கருத வேண்டும். பக்தன் என்பவன் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிலும் இறைவனைக் காண முயன்று, அனைத்து நாமங்களும், ரூபங்களும், அவனிடமிருந்தே தோன்றியுள்ளன என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்