azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

One may have immense faith in God. But from time to time, the power of Maya (illusion) may undermine one’s faith. Even in testing times, faith in God should never waver. Under no circumstances should anyone go against the injunctions of the Divine. Whatever worship one may offer, however intensely one may meditate, if one transgresses the commands of the Lord, these devotional practices become futile. The reason is that the Divine has no selfish objective or aim. It is out of small-minded selfish motives that people act against the sacred commands of the Lord. Even small acts of transgression may in due course assume dangerous proportions.
ஒருவருக்கு இறைவன் மீது அளவற்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அவ்வப்போது மாயையின் சக்தி அவரது நம்பிக்கையை குலைக்கலாம். அப்படிப்பட்ட சோதனை காலங்களிலும்,இறைவன் மீது கொண்ட நம்பிக்கை அசையவே கூடாது. எப்படிப் பட்ட சூழ்நிலையிலும்,இறைவனின் ஆணைகளுக்கு எதிராக, ஒருவரும் செயலாற்றக் கூடாது.எப்படிப்பட்ட பூஜைகள் செய்தாலும், எவ்வளவு தீவிரமாக தியானங்கள் செய்த போதும், இறைவனது கட்டளைகளை மீறினால்,இப்படிப்பட்ட ஆன்மீக சாதனைகள் வீண் தான். இதற்குக் காரணம் தெய்வத்திற்கு சுயநலமான குறிக்கோளே கிடையாது. குறுகிய சுய நலமான எண்ணங்களே மனிதர்கள் இறைவனது ஆணைகளுக்கு எதிராக செயலாற்றச் செய்கின்றன . இப்படிப்பட்ட சிறிய ஆணை மீறல்கள் கூட நாளடைவில் ஆபத்தான அளவுக்கு உருவாகி விடும்.