azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In the vessel of your heart, there is the wick of your Jiva (mind). That wick has been immersed all these days in the water of sensuous desires. Therefore, you are not able to light the lamp of wisdom. Pour out all the water of desires from the vessel of your heart, and fill it with Namasmarana of God. Take the wick of Jiva (mind) and dry it in the sunshine of Vairagya (detachment). After you squeeze out of it all the water present in the form of your desires from the wick of Jiva, fill your heart with the oil called devotion or Namasmarana (chanting the Lord’s name). Then you will be able to light the Jyothi or lamp of wisdom in your heart.
உங்களது இதயம் என்ற விளக்கில்,மனம் என்ற திரி உள்ளது. இவ்வளவு நாட்களாக, அந்தத் திரி சிற்றின்பங்கள் என்ற தண்ணீ£ரில் மூழ்கிக் கிடந்துள்ளது. எனவே தான் உங்களால் விவேகம் என்ற தீபத்தை ஏற்ற முடியவில்லை. இதயம் என்ற அந்தப் பாத்திரத்தில் இருந்த ஆசைகள் என்ற எல்லா நீரையும் கொட்டி விட்டு,அதை இறைவனின் நாமஸ்மரணையால் நிரப்புங்கள். மனம் என்ற திரியை எடுத்து, அதை வைராக்யம் என்ற வெய்யிலில் உலர வையுங்கள். ஆசைகள் உருவத்தில் உங்கள் மனம் என்ற திரியில் இருக்கும் எல்லா நீரையும் பிழிந்து எடுத்த பின், இறை நாமத்தை உச்சரிக்கும் நாமஸ்மரணை என்ற எண்ணையால்,உங்கள் இதயத்தை நிரப்புங்கள். அதன் பிறகே, விவேகம் என்ற ஜோதியை நீங்கள் உங்கள் இதயத்தில் ஏற்ற இயலும்.