azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 22 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 22 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Krishna is the embodiment of Love. The very word "Krishna" means one who attracts--"Karshatiti Krishna" (Krishna is one who attracts). "Krishyatiti Krishna" (Krishna is one who cultivates) is another derivation for the name. This means that Krishna is the Lord who cultivates the heart of the devotee by removing the weeds, sowing the seed of good qualities and growing the crop of love. "Kushyatiti Krishna" meaning, He is the one who gives delight. Krishna thus means the one who cultivates our hearts and raises in them the crop of bliss. The supreme message of the life of Krishna is the Divine Love Principle. Divine Love is strong, brilliant and unbreakable like diamond, and is also extremely precious. If you want to secure such Divine love, your love for God must be equally strong. You can cut diamond only with another diamond.
ஸ்ரீகிருஷ்ணர் அன்பின் திரு உருவம். 'க்ருஷ்ணா ' எனற வார்த்தைக்கு ' நம்மை ஈர்ப்பவர் '( கர்ஷ்ஷதிதி), ' நம் மனதைப் பண்படுத்துபவர்' ( க்ருஷ்யதிதி) என்று பொருள். அதாவது ஸ்ரீகிருஷ்ண பகவான் பக்தனது இதயம் என்ற நிலத்திலிருந்து களைகளை எடுத்து விட்டு,நற்பண்புகள் என்ற விதைகளை இட்டு, அன்பு என்ற பயிரினை வளர்க்கிறார் என்பது பொருள்.'ஆனந்தம் அளிப்பவர் '(குஷ்யதிதி), நமக்கு ஆனந்தத்தை அளிப்பவரும் ஸ்ரீகிருஷ்ணரே என்பது மற்றொரு பொருள். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் நமது இதயங்களைப் பண்படுத்தி, அவற்றில் ஆனந்தம் என்ற பயிரை வளர்ப்பவர் என்றும் பொருள். ஸ்ரீ கிருஷ்ணரது வாழ்க்கையின் மிக உயர்ந்த போதனை தெய்வீக அன்பு என்ற கோட்பாடுதான். தெய்வீக அன்பு என்பது, சக்தி வாய்ந்த,ஒளி வீசும் மற்றும் தகர்க்க முடியாத வைரம் போன்றதும் மிக மிக விலை மதிப்பற்றதும் ஆகும். இப்படிப் பட்ட தெய்வீக அன்பை நீங்கள் பெற விரும்பினால்,இறைவன் மீது நீங்கள் கொள்ளும் அன்பும் அதே அளவு உறுதியானதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வைரத்தை மற்றொரு வைரத்தால் தான் அறுக்க முடியும்.