azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine incarnates from age to age for the purpose of protecting the virtuous, punishing the wicked and establishing righteousness. Krishna was one such manifestation of the Divine. In fulfilling his pledge to Mother Earth, He rid the world of many wicked rulers and sought to establish the reign of righteousness for the protection of the good. Today, if the Divine wants to punish the wicked and protect the righteous, there will not be even one wholly righteous person. All will qualify for punishment. Hence it is not a question of destroying the wicked. The task today is to transform Adharma (unrighteousness) into Dharma (righteousness). This has to be done through love alone.
நல்லோரைக் காப்பதற்கும், தீயோரை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், இறைவன் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறான். ஸ்ரீகிருஷ்ணரும் அப்படிப் பட்ட தெய்வீகத்தின் ஒரு திருவுருவமே. தான் பூமி மாதாவிற்குக் கொடுத்த வாக்கின் படி இந்த உலகில் இருந்த பல தீய அரசர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பதற்காக தர்மத்தை நிலை நாட்டினார். இன்றோ, இறைவன் நல்லவரைக் காத்து, தீயோரை அழிக்க வேண்டும் என விரும்பினால்,முழுமையான ஒரு நல்லவர் கூட இருக்க மாட்டார். அனைவருமே தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருப்பர். எனவே, தீயோரை அழிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய கடமை, அதர்மம் கொண்டோரை, தர்மம் உள்ளவராக மனமாற்றம் செய்வது தான்.இதை அன்பினால் மட்டும் தான் செய்ய இயலும்.