azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

No amount of scholarship will give you peace, unless you are filled with the love of God. The craze for money is the cause of all the ills in the world. As craving for wealth increases, the desire for God declines. Due to the craze for riches, all other evil qualities like pride, greed, envy and hatred have grown amongst mankind today. Wealth is, indeed needed, but it is the wealth of Divine Grace and the treasure of Divine Love that will last forever and protect you. All other things are transient. You should also realize that God responds only to deep and genuine devotion. Verbal supplications will not suffice. You must acquire the yearning that will melt the heart of God. Even butter that is so soft melts only when heat is applied to it. Likewise, the warmth of Bhakthi (love for the Lord) has to be applied to the butter of the human heart to make God melt.
எவ்வளவு தான் புத்தக அறிவு இருந்தாலும், இறைவன் மீது கொண்ட அன்பால் நீங்கள் நிறைந்திருக்கவில்லை என்றால் அமைதி கிட்டாது.பணத்தின் மீது உள்ள வெறி தான் இந்த உலகின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம். செல்வத்தின் மீது வேட்கை பெருகும் போது,இறைவனை மீது நாட்டம் குறைந்து விடுகிறது. பண வெறியால், மற்ற தீய குணங்களான இறுமாப்பு, பேராசை, பொறாமை மற்றும் த்வேஷம் ஆகியவை மனித குலத்தில் இன்று பெருகி விட்டன. செல்வம் தேவைதான்; ஆனால், இறை அருள் என்ற செல்வமும்,இறை அன்பு என்ற புதையலும் தான் நிலையாக இருந்து உங்களைக் காக்க வல்லவை. மற்ற அனைத்தும் நிலையற்றவை. ஆழ்ந்த, உண்மையான பக்திக்குத் தான் இறைவன் செவி சாய்க்கிறான் என்பதை நீங்கள் உணர வேண்டும். வார்த்தை ஜாலங்களால் இரைந்து வேண்டினால் மட்டும் போதாது. இறைவனது உள்ளத்தையே உருகச் செய்யும் அளவிற்கான ஏக்கத்தை நீங்கள் பெற வேண்டும். மிக மென்மையான வெண்ணெய் கூட வெப்பம் இருந்தால் தான் உருகும். அதே போல,பக்தி என்ற வெப்பத்தை, மனித இதயம் என்ற வெண்ணெயில் செலுத்தினால் இறைவனை உருகச் செய்ய முடியும்.