azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone should cultivate good thoughts and eschew all bad feelings. God has no dislike for anyone. He envies no one. He has no ill-will towards anyone. Nor does He have favourites. The grace one gets is the result of one's own feelings. "Bhaavaatheetham Thriguna Rahitham" (The Divine is beyond feelings and attributes). He is "Ekam Sathyam Vimalam Achalam" (the One, Truth, Pure, Immovable). He is "Sarvadhee Saakshibhuutham" (Eternal Witness in all minds). When devotees complain nowadays as to why they are being punished by the Lord in various ways, they do not realize that it is not God who is punishing them. Their own fears and fancies are the cause for their troubles. He alone is a true devotee who recognizes that the sufferings that one undergoes are the consequences of one’s own bad thoughts and actions.
ஒவ்வொருவரும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, தீய உணர்வுகளைத் தவிர்க்க வேண்டும். இறைவனுக்குப் பிடிக்காதவர் என்று எவருமில்லை. அவருக்கு எவர் மீதும் பொறாமை இல்லை.எவர் மீதும் தீய நோக்கங்கள் அவனுக்கு இல்லை.அவனுக்கு பிரத்யேகமாகப் பிடித்தவர்கள் என்றும் எவரும் இல்லை. ஒருவர் பெறும் கருணை அவரது உணர்வுகளின் விளைவே. இறைத்தன்மை என்பது முக்குணங்களுக்கும்,உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டது. அவன் ஒருவனே, சத்யமும், தூய்மையும், நிலையானவனும் ஆவான். அனைத்திலும் சாக்ஷியாக இருப்பவன் அவனே. இந்நாளில் தங்களை ஏன் ஆண்டவன் பல விதங்களில் தண்டிக்கிறான் என்று முறையிடும் பக்தர்கள், அவர்களை தண்டிப்பவன் இறைவன் அல்ல என்பதை உணர்வதில்லை. அவர்களது அச்சங்களும் கற்பனைகளுமே, அவர்களது துன்பங்களுக்குக் காரணம். தான் அனுபவிக்கும் துயரங்களுக்குத் தன்னுடைய தீய எண்ணங்கள் மற்றும் தீய செயல்களே காரணம் என்பதை உணர்பவனே உண்மையான பக்தன்.