azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion does not call for arduous spiritual practices or severe disciplines of any kind. There is no need to perform intense penances or Yajnas (religious sacrifices). The only easy and sure means for ordinary people to realize God, without regard to their caste, nationality, gender or any other qualification, is to have intense devotion and love for God. Where there is deep faith, there is intense love. Where there is love, there is Shraddha (earnestness). Through earnestness, the Jnana (higher knowledge) is gained. This knowledge enables one to practice spirituality. The Gopikas (cowherd maidens) exemplified this; they experienced the continuous presence of God within them and outside them. They showed that such sublime love was possible even for ordinary persons with little knowledge of the scriptures or spiritual disciplines and demonstrated the inextricable link between the Divine and the individual.
பக்தி என்பது, தீவிரமான ஆன்மீக சாதனைகளையோ,அல்லது கடுமையான கட்டுப்பாடுகளையோ எதிர்பார்ப்பதில்லை. ஆழ்ந்த தவங்களையோ, யாகங்களையோ செய்யவும் தேவையில்லை.குலம்,நாடு,இனம் மற்றும் எந்த விதமான வேறுபாடும் இன்றி சாதாரண மனிதர்கள் இறைவனை உணர்வதற்கான வழி, அவனிடம் ஆழ்ந்த பக்தியும்,அன்பும் கொள்வதே ஆகும். அசையாத நம்பிக்கை இருந்தால், ஆழ்ந்த அன்பு இருக்கும். அன்பிருக்கும் இடத்தில் சிரத்தை இருக்கும். இந்த சிரத்தையின் மூலம் ஞானத்தைப்( உயர் அறிவு ) பெறலாம். ஞானம் உண்மையான ஆன்மீகப் பயிற்சிக்கு வழி வகுக்கிறது.கோபிகைகள் இதற்கு சிறந்த உதாரணம்;தங்களது உள்ளும் , புறமும் எப்பொழுதும் இறைவனை அனுபவித்தவர்கள் அவர்கள். சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மீக சாதனைகளைப் பற்றி எதுவுமே அறியாத பாமரர்களான அவர்களால் மேன்மையான அன்பை வெளிப்படுத்த முடியும் என்பதை உணர்த்தி,இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை நிரூபித்தார்கள்.