azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Human life is beset with ups and downs, joys and sorrows. These experiences are intended to serve as guideposts for man. Life would be bland if there were no trials and difficulties. It is these difficulties that bring out the human values in man. You cannot get the juice of the sugarcane without crushing it. You cannot enhance the brilliance of a diamond without cutting it and making many facets. One must shed his or her pettiness and develop broad-mindedness by the cultivation of love. Only when you undergo various difficulties, you can experience the sweet bliss of Self-realization. Hence, difficulties must be welcomed and must be overcome. When you overcome the difficulties, you are sure to experience Divinity.
மனித வாழ்க்கை உயர்வு ,தாழ்வு,சுகம்,துக்கம் ஆகியவற்றால் நிரம்பியது.இந்த அனுபவங்கள் மனிதனுக்கு வழிகாட்டும் கம்பங்களாக பணி புரிய ஏற்படுத்தப் பட்டவை. போராட்டங்களும், கஷ்டங்களும் இல்லாவிட்டால், வாழ்க்கை சுவையற்றதாகி விடும். இந்தக் கஷ்டங்களே, மனிதனில் உள்ள மனிதப் பண்புகளை வெளிக் கொண்டு வருகின்றன. கரும்பைக் கசக்கிப் பிழியாமல், கரும்புச் சாறைப் பெற முடியாது. பல முகங்களாக அறுக்காமல் வைரத்தின் ஜொலிப்பை அதிகப் படுத்த முடியாது. ஒவ்வொருவரும் அன்பைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் தமது குறுகிய நோக்கை விடுத்து, பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல கஷ்டங்களை அனுபவித்தால் தான், தன்னை உணர்தல் என்ற பேரானந்தத்தை அனுபவிக்க முடியும். எனவே, கஷ்டங்களை வரவேற்று, அவற்றை முறியடிக்க வேண்டும். கஷ்டங்களை வென்று வரும்போது, நீங்கள் நிச்சயமாக தெய்வாகத்தை உணர்வீர்கள்