azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Contentment is a Sathwic (pure) quality; it will not transform you into an idler - no, not at all! Instead, it will permit the mind to progress towards the Lord, and it will grant peace. It will also curb unessential activities that have profit for oneself as the aim. Contented, the aspirant can ignore the dangers and difficulties of the path. The aspirant treats all the impermanent things of this life as poison and discards them. Discrimination, renunciation, and the spirit of inquiry develop through contentment. The contented person will be fully Sathwic and will lead an inner life, in communion with the Atma. That person can do any work without rest and without complaint. The mind, which sways in many directions, gets a single aim. Contentment gives the enthusiasm and vigour necessary for treading the path that leads to Sakshathkara (realization of God).
மனத்திருப்தி என்பது ஒரு ஸாத்வீக குணம்;அது ஒரு போதும் உங்களை சோம்பேறிகளாக ஆக்கவே ஆக்காது. மாறாக,அது உங்கள் மனதை இறைவனை நோக்கி முன்னேற வைத்து அமைதி அளிக்கும். தனக்கு மட்டும் லாபம் அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட தேவையற்ற செயல்களைத் தடுக்கும். மனத்திருப்தியுடைய சாதகர் வழியில் வரும் அபாயங்கள் மற்றும் கஷ்டங்களை உதாசீனப் படுத்த இயலும். சாதகர் வாழ்வின் நிலையற்றவற்றை நஞ்சாகக் கருதி அவற்றை ஒதுக்கி விடுகிறார். பகுத்தறிந்து உணர்வது,துறவு மனப்பாங்கு மற்றும் ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் ஆகியவை மனத்திருப்தியால் வளர்ச்சி பெருகின்றன. மனத்திருப்தி உடையவர் ஸாத்வீகமாக, ஆத்மாவுடன் ஒன்றிய உள்ளார்ந்த வாழ்க்கை நடத்துவார். இப்படிப் பட்டவர் எந்த வேலையையும்,ஓய்வின்றி,குறை கூறாது செய்வார். பல திசைகளில் பாயும் மனதும் ஒரே குறிக்கோளைப் பற்றி நிற்கும்.மனத்திருப்தியானது இறைவனை உணரும் நிலையான ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடையும் பாதையில் செல்வதற்கான உற்சாகம் மற்றும் சக்தியை அளிக்கிறது.