azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Young men and women have to spring into the sphere of action and strive to the best of their ability for the building up of a resurgent India, and a happy peaceful world. You must shed the desire for power. The desire to uproot corruption and immorality, and the urge to work hard should firmly be implanted in the heart of every youth. Mother India’s future depends on you and she is waiting for you. Even as it is the duty of children to serve and please their mother, it is the bounden duty of every child of the nation to make her happy. To serve the Motherland selflessly should be the sacred ideal of one’s life. Thus, it is your bounden duty to inculcate in yourself the wider perspective of national unity and integrity and engage yourself in the dedicated service of the nation.
இளைஞர்களான ஆண்களும் ,பெண்களும், பொங்கி எழுந்து தங்களது முழுத்திறனையும் பயன்படுத்தி,எழுச்சி மிக்க பாரதம் மற்றும் மகிழ்ச்சியான,அமைதியான உலகம் ஆகியவற்றை உருவாக்க பாடுபட வேண்டும். ஊழல் மற்றும் தீய ஒழுக்கங்களை வேரோடு களைவதில் நாட்டம்,மற்றும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவை ஒவ்வொரு இளைஞர் மனதிலும் உறுதியாக பதிய வேண்டும். பாரதத் தாயின் எதிர்காலம் உங்களைப் பொறுத்து உள்ளது; அவள் உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறாள். எப்படி ஒரு தாய்க்கு சேவை செய்து அவளை மகிழ்விப்பது பிள்ளகளின் கடமையோ,அதே போன்று தேச மாதாவை மகிழ்விப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு பிள்ளையின் கடமை.தாய்நாட்டிற்கு தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்பது ஒருவரின் புனிதக் கோட்பாடாக இருக்க வேண்டும். விசாலமான எண்ணமான நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உங்களுள் பதிய வைத்துக் கொண்டு நாட்டின் சேவையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.