azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people focus on spiritual knowledge alone, ignoring the secular branches of learning. This is not desirable because they tend to miss both and wander aimlessly between the two. Secular learning should not be neglected. One should acquire spiritual awareness, while seeking mastery over secular subjects. So even as you acquire secular knowledge, do spend some time everyday meditating on God. (Sathya Sai Vahini, Ch 21:”The Inner Inquiry”.)
SECULAR KNOWLEDGE IS LIKE THE BULB AND SPIRITUAL KNOWLEDGE LIKE THE CURRENT.
BOTH ARE ESSENTIAL FOR THE PROGRESS OF MAN AND THE WORLD AT LARGE. - BABA
சிலர் ஆன்மிக அறிவில் மட்டும் கவனம் செலுத்தி, உலகியலான கல்வியின் கிளைகளை உதாசீனப் படுத்துவார்கள். இது விரும்பத் தக்கதல்ல; ஏனெனில் அவர்கள் இரண்டையும் இழந்து, இரண்டிற்கும் நடுவில் குறிக்கோளின்று அலைந்து திரிவார்கள். உலகியலான கல்வியைப் புறக்கணிக்கக் கூடாது. உலகியலான விஷயங்களில் பாண்டித்யம் பெற விழையும் அதே சமயத்தில், ஒருவர் ஆன்மிக விழிப்புணர்வையும் பெற வேண்டும். எனவே, உலகியலான அறிவை நீங்கள் பெறும் போதே, தினமும் சில நேரம் இறைவனைத் தியானிப்பதில் செலவிடுங்கள்.
உலகியலான அறிவு பல்பு போன்றது; ஆன்மிக அறிவு மின்சாரம் போன்றது. மனிதன் மற்றும் உலகின் முன்னேற்றத்திற்கு இரண்டுமே அத்தியாவசியமானவையே- பாபா