azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You must have contentment, whatever be the gain or loss. This is essential. For the contented mind, life is an endless festival, but the mind worried by desire will have no rest. With desire troubling you, concentration is impossible. Desire is the fire in your frame; it reduces you to ashes. Contentment is the effective drug to destroy it. Just as a bath in the cool waters of a stream refreshes a traveller who is exhausted and perspiring in the burning heat of day, the one suffering from the scorching fire of greed will be refreshed by the pellucid waters of contentment. Always remember that contentment grants and increases your happiness.
லாபமோ,நஷ்டமோ,உங்களுக்கு மனத்திருப்தி இருக்க வேண்டும். இது மிகவும் அவசியம். திருப்தி உள்ள மனத்திற்கு வாழ்க்கை ஒரு முடிவே இல்லாத கொண்டாட்டம் தான். ஆனால், ஆசைகளால் கவலைகள் நிறைந்த மனதிற்கு அமைதியே இருக்காது. ஆசைகள் உங்களைத் துன்புறுத்தும் போது, முனைப்புடன் இருப்பது இயலாத ஒன்று. உங்களுள் கொழுந்து விட்டு எரியும் தீ போன்றது ஆசை;அது உங்களையே எரித்து சாம்பலாக்கி விடும். மனத் திருப்தியே அதை அழிக்க வல்ல மருந்தாகும். கடும் வெயிலில் வேர்த்துக் களைத்திருக்கும் பயணிக்கு, குளிர்ந்த நீரோடையில் குளிப்பது எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கிறதோ, அதே போல், தெளிந்த திருப்தி என்ற நீர் ,கொளுத்தும் ஆசை என்ற தீயால் வாடுபவருக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. மனத்திருப்தி என்பது சந்தோஷத்தை அளிப்பதோடு,அதைப் பெருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.