azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If in a conversation, you use words that blame others and despise them, then the situation will play out in such a manner where you will become the target of blame. Your mind will get agitated and your objectives of attaining spiritual progress will be disturbed because the atmosphere will be impure. Therefore, if you really wish to be happy through spiritual practices, as a preliminary to the process, you must be engaged either in joyful conversation or in happy thoughts or memories. Sweet and soft conversation will help you a great deal. You must cultivate such a character, for character outlasts the body. Virtues are your strength and glory. Character is power. So train your mind and use it to hold fast to the goal to achieve oneness with God.
பிறரிடம் பேசும் போது, மற்றவர்கள் மீது வெறுப்பு, மற்றும் அவதூறு வரும் வகையிலான வார்த்தைகளை உபயோகப் படுத்தினீர்கள் என்றால், பின்னர் நீங்களே அவதூறுக்கு உள்ளாகின்ற நிலைமை உருவாகி விடும். நிலைமை தூய்மை அற்றதாகி விடுவதால், உங்கள் மனம் கலக்கமடைந்து,ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உங்களது குறிக்கோள் தடைப் பட்டு விடும்.ஆன்மீக சாதனையை ஆனந்தத்துடன் செய்ய வேண்டும் என்றால், முதன் முதலில், நீங்கள் சந்தோஷம் நிறைந்த பேச்சுக்கள், எண்ணங்கள், நினைவுகள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். இனிமையான ,இதமான பேச்சு உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் அத்தகைய குண நலமுடையவராக ஆக வேண்டும்,ஏனெனில்,குண நலன்கள் இந்த உடலை விட அதிகநாள் நிலைத்திருக்கும். நற்குணங்களே உங்களது பலமும்,புகழும் ஆகும். நன்னடத்தையே சக்தி படைத்தது. எனவே உங்களது மனத்திற்கு பயிற்சி அளித்து,இறைவனோடு இணைய வேண்டும் என்ற இலக்கை உறுதியாக பற்றிக் கொள்ளச் செய்யுங்கள்.