azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

When the rope is seen in darkness, by mistake or ignorance, it appears as a serpent, displacing the truth of the rope. When the truth is known, and the onlooker feels, “This is no serpent; it is a rope!” then the serpent instantly disappears, for it was mere falsehood. So feeling or thinking is able to create the serpent and also to destroy it! Remember this: “Assertion creates, negation destroys!” Both are mental processes that can be classified as ‘thoughts’. As you think, so you become. Thoughts such as “Is this world real?” or “Are worldly joys worth pursuing?” though they emanate from Ajnana (illusion), do shape us from within. To overcome illusion or ignorance, the following are extremely helpful: (1) attention towards Adhyatmic gain (spiritual progress); (2) steady faith; (3) devotion and (4) the grace of God. Even if one of these four is absent, one cannot experience the highest bliss of the Absolute.
இருளில் கயற்றைப் பார்த்து, தவறாகவோ,அறியாமையினாலோ, கயிறு என்ற உண்மையை மறைத்து, அது பாம்பு போலத் தோன்றுகிறது. உண்மை தெரிந்த பின், பார்ப்பவர், ‘இது பாம்பு அல்ல, கயிறுதான்’ என உணர்ந்தவுடனேயே, வெறும் பொய்மை என்பதால்,பாம்பு மறைந்து விடுகிறது. எனவே, நமது உணர்வுகளோ அல்லது எண்ணங்களோதான் பாம்பை உருவாக்குகின்றன; அதை அழிக்கவும் செய்கின்றன. நினைவில் கொள்ளுங்கள், ‘இருக்கிறது என்பது ஒன்றை உருவாக்குகிறது; இல்லை என்பது அதை அழித்து விடுகிறது’. உங்கள் எண்ணம் எப்படியோ, அப்படியே நீங்கள் ஆகிறீர்கள். இரண்டுமே மனதில் ஏற்படும் ‘ எண்ணங்கள் ’ என்ற நிகழ்வுகளே. அஞ்ஞானத்தினால் ஏற்பட்டாலும், ‘ இந்த உலகம் நிஜமானதா?’ , ‘ உலகியலான இன்பங்களைத் தேடுவது சரிதானா?’ என்ற கேள்விகள் , நம்மை உட்புறத்திலிருந்து உருவாக்குகின்றன. மாயை மற்றும் அறியாமையை வெல்வதற்கு கீழ்க்கண்டவை பெரிதும் உதவுகின்றன; 1) ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது 2) நிலையான நம்பிக்கை 3) பக்தி மற்றும் 4) இறைவனது அருள். இந்த நான்கில் எந்த ஒன்று இல்லை என்றாலும் பரமானந்த நிலையை அனுபவிக்க இயலாது.