azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 31 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 31 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All are born out of the womb of one Lord. Just as many varieties of fish and water loving animals swim around a large lake, multitudes of human beings move about in ‘the ocean’ of the Lord. This is an awe-inspiring sight. Some are undeveloped, some are growing; they swim around, greedy and selfish. In the midst of this crowd of ignorant beings are a few highly evolved souls, the wise (jnanis) and yogis. Since they are mixed up with the ignorant, it becomes difficult to distinguish the ones with wisdom from the others. A microscope is necessary to identify the red corpuscles in the blood; similarly, a special mechanism is needed to find the wise. That mechanism is none other than constant contemplation of the Lord (dhyana). (Dhyana Vahini, Ch 10: “Innocence, Purity and Humility”.)
THE THOUGHT OF GOD, THE CONTEMPLATION OF GOD, THE GRACE OF GOD –
THESE ALONE CAN CONFER THE PURITY WE NEED. - BABA
அனைவரும், ஒரே இறைவனின் கர்ப்பத்திலிருந்து பிறந்தவர்களே. எவ்வாறு ஒரு பெரிய ஏரியில் பலவிதமான மீன்களும், தண்ணீர் விரும்பும் மிருகங்களும் நீந்திக் கொண்டு இருக்கின்றனவோ, அவ்வாறே பல தரப்பு மனிதர்களும், இறைவனின் சாகரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். இது ஒரு வியப்பூட்டும் காட்சியாகும். சிலர் வளர்ப்பு குன்றியவர்கள், சிலர் வளர்ந்து கொண்டு இருப்பவர்கள்; அவர்கள் பேராசை மற்றும் சுயநலத்துடன் நீந்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த அறியாதவர்களின் கூட்டத்திற்கு நடுவில், ஆன்மிகத்தில் மிகவும் முன்னேறிய ஒரு சில ஞானிகளும், யோகிகளும் இருக்கின்றனர். அவர்கள் அறியாதவர்களோடு கலந்து இருப்பதால், ஞானிகளை மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பது கடினமாகிறது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களைக் கண்டு கொள்ள ஒரு மைக்ராஸ்கோப் தேவைப் படுகிறது; அதைப் போலவே, ஞானிகளைக் கண்டு கொள்ள ஒரு தனிப்பட்ட வழிமுறை தேவைப் படுகிறது. அந்த வழி முறை இடையறாத இறை நாமஸ்மரணையே (தியானம்) அன்றி, வேறில்லை.
இறைச் சிந்தனை, இறைநாமஸ்மரணை, இறை அருள்- இவை மட்டுமே நமக்குத் தேவையான பரிசுத்தத்தைத் தர முடியும் - பாபா