azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In order to persuade a child to stop crying and calm down, we often relate a story suitable for its level of comprehension. In the same manner, the Jivi (individual), fascinated by the constant attraction of maya and bound by tendencies cultivated during many lives in the past, becomes lost in illusion and cries out ‘Why do I keep on suffering?’ The solution was provided when the sage-preceptor, Vasishta, instructed Lord Ramachandra. “Rama!” he said, “Rather than entangling Yourself in the inquiry regarding how ignorance entered man, put all Your effort into its removal.” This lesson is directed not only to Rama but to all humanity. It instructs everyone who does not realise the transcendental Truth behind the objective world. Simply be convinced that you have this basic ignorance, and give up struggling with all your suffering. You must learn how to overcome your ignorance by treading the path that will lead you to wisdom or Jnana. Wisdom is light. Ignorance is darkness. And darkness can persist only until light dawns. (Sathya Sai Vahini, Ch 20: “The Primal Purpose”.)
- Baba
- Baba
ஒரு குழந்தையை அழுகையை நிறுத்தி அமைதியாக இருக்கச் செய்வதற்காக, அதன் புரிந்துகொள்ளும் நிலைக்கு ஏற்ற ஒரு கதையை நாம் அடிக்கடி கூறுகிறோம். அதே போல, மாயையின் தொடர்ந்த ஈர்ப்பால் கவரப்பட்டு, முந்தைய பல ஜென்மங்களில் வளர்த்துக்கொண்ட வாசனாக்களால் கட்டுண்டு, மாயையில் திசை தடுமாறும் ஜீவி (மனிதன்), 'நான் ஏன் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்?' என்று அழுது புலம்புகிறான். இதற்கான தீர்வு, பகவான் ராமரின் குருவான வசிஷ்ட முனிவர், அவருக்கு அளித்த அறிவுரையில் இருக்கிறது. வசிஷ்ட முனிவர், ராமரிடம், "ராமா! அறியாமை மனிதனிடம் எவ்வாறு புகுந்தது என்ற ஆராய்ச்சி வலையில் சிக்கிவிடாமல், உன் முயற்சி அனைத்தையும், அதை நீக்குவதில் செலுத்து" என்று அறிவுறுத்தினார். இந்த போதனை ராமருக்கானது மட்டும் அல்லாது அனைத்து மனித குலத்திற்கும் பொருந்தும். பொருட்களாலான இந்த உலகத்தின் பின்னணியில், அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கும் சத்யத்தை உணராத அனைவருக்கும் இது அறிவுரையாகிறது. உங்களுள் இந்த அறியாமை உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, உங்களுடைய அனைத்து துன்பங்களுடன் போராடுவதை விட்டுவிடுங்கள். உங்களை ஞானத்திற்கு இட்டுச் செல்லும் பாதையைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய அறியாமையை எவ்வாறு வெல்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஞானமே ஒளி, அறியாமையே இருள். ஒளி பிறக்கும் வரை தான் இருள் இருக்க முடியும். (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம் 20: "முன்முதல் குறிக்கோள்")
- பாபா
- பாபா