azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Space is one. But it is held in diverse containers like the home, the pot, the building and the canvas. There is no truth in this divided existence; it is the one space that exists in all these ‘receptacles’ which are varied shapes and forms, with distinct names attached to them, and different modes of behaviour and use. So too, individual beings (jivas) have different names and forms, peculiarities, specialties and behaviours. But like the string that holds the beads, passing in and through each one, the Super Consciousness in all individuals is ONE. That is the Self, Atma, which is mistaken as the ego through ignorance. Only when this truth is acquired, can man release himself from the hold of this transient world. (Sathya Sai Vahini, Ch 20: “The Primal Purpose”.)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
ஆகாசம் ஒன்றே. ஆனால், அது, இல்லம், பானை, கட்டிடம் மற்றும் திரை என்ற வித விதமான பாத்திரங்களில் பிடித்து வைக்கப் படுகிறது. இந்த பிரிக்கப் பட்ட இருப்பில் உண்மை இல்லை; பல விதமான வடிவங்கள் மற்றும் ரூபங்கள், ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட பெயர் , வேறு பட்ட நடத்தை மற்றும் உபயோகம் கொண்ட இந்த அனைத்து கலன்களிலும் இருக்கும் ஆகாசம் ஒன்றே. அதைப் போலவே ஜீவாத்மாக்களும். வெவ்வேறு நாமங்கள் மற்றும் ரூபங்கள், தனித்தன்மைகள், சிறப்புக்கள் மற்றும் நடத்தைகள், உடையவர்கள். ஆனால், மணிளைக் கோர்த்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் ஊடுருவி அவைகளைப் பிடித்து வைத்து இருக்கும் நூலைப் போல, அனைத்து மனிதர்களிலும் உள்ள பரமாத்மா ஒன்றே. அந்த ஆத்மா, அறியாமையின் காரணமாக அஹங்காரம் என்று தவறாகக் கருதப் படுகிறது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் தான் மனிதன் தன்னை இந்த தாற்காலிகமான உலகின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடமும்
ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா