azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people feel proud that they have been of service to others. They are eager to be praised as beneficent and munificent. This attitude reveals their Ajnana, ignorance. They must journey to a higher stage called Vijnana, when the heart is transformed by adherence to truth, non-violence, and compassion. Such a person can then understand himself, his kinship with the Cosmos, and with the Creator of the Cosmos. Then he lives and acts in accordance with that understanding, without ignorance, doubt or disharmony.
தாங்கள் பிறருக்கு சேவை செய்கிறோம் என்று பலர் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். தங்களை மற்றவர்கள் உதவி செய்பவர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் என்று மற்றவர் புகழ வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த மனப்பாங்கு அவர்களது அஞ்ஞானத்தைக் குறிக்கிறது. அவர்கள் இந்த நிலையிலிருந்து சத்யம், அஹிம்சை, கருணை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மனமாற்றம் ஏற்படும் உயர் நிலையான விஞ்ஞானத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இப்படிப் பட்ட மனிதர் தன்னையும், தனக்கும் ,படைப்பிற்கும், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவருக்கும் உள்ள உறவையும் உணர இயலும். பிறகு, அவர் சந்தேகமோ, குழப்பமோ, அறியாமையோ இன்றி இப்படிப்பட்ட தெளிவான நிலையில் வாழவும், நடக்கவும் செய்கிறார்.