azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In order to fulfill the yearning of His devotee, God will appear in any form, at any place. But to see God, you must pray to Him with one-pointed concentration. This type of single-mindedness comes only out of Sathwa Guna (pure qualities), and that again is the product of meditation. Therefore, you must cultivate good qualities, and in order to develop these, you should desire Satsang (the company of the good). Seek the company of the noble; avoid evil company. Your true companions are those who talk and discourse about the Lord, about truth, about Seva (service) of others, and about love that considers all as equal.
தன்னுடைய பக்தனின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய இறைவன் எங்கு வேண்டுமானாலும்,எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தோன்றுவான். ஆனால், இறைவனைக் காண வேண்டுமென்றால், நீங்கள் ஒரே முனைப்புடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிப் பட்ட முனைப்பு ஸத்வ குணத்திலிருந்து (தூய்மையான நற்குணங்கள்) தான் வர முடியும்; அதுவும் தியானத்தின் பலனால் தான். எனவே, நீங்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதற்கு நீங்கள் ஸத்ஸங்கத்தை நாட வேண்டும். உயர்ந்தவர்களின் நட்பை நாடுங்கள்; தீயவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். இறைவன், ஸத்யம், பிறருக்கு சேவை செய்தல்,அனைவரையும் ஒன்றாகக் கருதும் அன்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசி,உரையாடுபவரே உங்களது உண்மையான நண்பர்கள்.