azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Three types of activity reach God and earn His Grace: (1) those not prompted by personal desire, (2) those emanating from unselfish love and (3) prayer arising from pure hearts. The Lord pays heed only to these and they reach God direct. The rest are the concern of the various deities who preside over their disposal. Therefore, prayers have to be unselfish, saturated with love, and free from the taint of attachment to the gift that the prayer would bring. (Sathya Sai Vahini, Ch 19: “Prayer”)
THROUGH PRAYER AND CONTEMPLATION ON GOD, YOU SHOULD
TRY TO CONTROL THE EVIL QUALITIES IN YOU. -BABA
மூன்று விதமான செயல்பாடுகள் இறைவனை நேராக அடைந்து அவனது அருளைப் பெறுகின்றன (1) சொந்த ஆசையால் உந்தப் படாதவை (2) தன்னலமற்ற ப்ரேமையால் எழுந்தவை (3) பரிசுத்தமான இதயங்களில் இருந்து எழும் பிரார்த்தனைகள். இறைவன் இவைகளுக்கு மட்டுமே செவி சாய்க்கிறான் ; இவையே இறைவனை நேரடியாகச் சென்று அடைகின்றன.மீதி எல்லாம் மற்ற பலவற்றிற்கு அதிபதியான தேவதைகளைச் சார்ந்தது. எனவே, பிரார்த்தனைகள், தன்னலமற்றதாகவும், ப்ரேமையில் தோய்ந்ததாகவும், பிரார்த்தனை கொண்டு வரும் பரிசின் மீது பற்றின் எந்தச் சுவடு கூட இல்லாததாகவும், இருக்க வேண்டும்
இறைவன் மீதான பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம், உங்களுள் உள்ள தீய குணங்களைக் கட்டுப் படுத்த நீங்கள் முயல வேண்டும் -பாபா