azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Always discuss the good in others. Never think about the evil actions of others. If you can, keep trying to turn them to good ways and give them good advice. You should cultivate peace of mind, the charitableness and eagerness to promote the welfare of all that is necessary for the attitude. These can come only through repetition of the Divine Name and meditation. The wealth derived from repetition of the Lord’s Name and meditation is Sadguna (good qualities). Good qualities clean the exterior and also purify and ennoble the inner tendencies.
பிறரிடம் உள்ள நல்லவற்றைப் பற்றியே எப்பொழுதும் பேசுங்கள். பிறரது தீய செயல்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள். உங்களால் முடிந்தால் அவர்களுக்கு நல்ல ஆலோசனை அளித்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்து கொண்டே இருங்கள். இப்படிப் பட்ட மனப்பாங்கைப் பெறுவதற்கு மன அமைதி,பிறருக்கு உதவும் இயல்பு மற்றும் அனைவரது நலத்தையும் பேண வேண்டும் என்பதில் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை, நாமஸ்மரணை மற்றும் தியானத்தினால் மட்டுமே பெற இயலும். நாமஸ்மரணை மற்றும் தியானத்தினால் பெறுகின்ற செல்வமே சத்குணமாகும். இந்த நற்குணங்கள் நமது வெளித்தோற்றத்தை சுத்தப் படுத்துவதோடு, உள்ளுணர்வுகளைத் தூய்மைப் படுத்தி, அவற்றை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன.