azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Its animal nature to get attracted to the exterior; the Lord is pleased only by internal charm that arises from good character. Do not be driven by the low tastes of the world and the cheap regard that people bestow. Strive for the grace and love of the Lord. The affection that people shower is not constant, for it depends on their likes and dislikes. But the love that the Lord bears for you depends on your good qualities alone; it gives you permanent joy. True beauty lies in character, not in anything else. There is nothing more charming than this. (- Dhyana Vahini, Ch 9: “Spiritual Development”)
THE THOUGHT MANIFESTS AS WORD, THE WORD TRANSLATES INTO DEED, THE DEED DEVELOPS INTO HABIT, THE HABIT HARDENS INTO CHARACTER. SO WATCH THE THOUGHTS AND ITS WAYS. - BABA
வெளிப்புறத் தோற்றத்தால் ஈர்க்கப் படுவது மிருக இயல்பாகும்; நற்குண நலனிலிருந்து எழும் அக அழகால் மட்டுமே இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். உலகின் கீழ்த்தரமான சுவைகளாலும், மக்கள் காட்டும் மலிவான அக்கறையாலும் உந்தப் படாதீர்கள்.இறைவனது அருள் மற்றும் ப்ரேமைக்காகப் பாடுபடுங்கள்.மக்கள் காட்டும் பாசம் நிலையானதல்ல, ஏனெனில், அது அவர்களது விருப்பு , பெறுப்புக்களைப் பொறுத்தது. ஆனால், இறைவன் உங்கள் மேல் வைக்கும் ப்ரேமை உங்களது நற்குணங்களை மட்டுமே பொறுத்தது; அது உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தைத் தரும். உண்மையான அழகு நற்குணநலனில் தான் இருக்கிறதே அன்றி, வேறு எதிலும் அல்ல. இதை விடக் கவர்ச்சியானது வேறு எதுவும் இல்லை.
சிந்தனை, சொல்லாக வெளிப்படுகிறது, சொல் செயலாக மாறுகிறது, செயல் பழக்கமாக வளருகிறது, பழக்கம் குணநலனாக நிலைத்து விடுகிறது. எனவே, சிந்தனைகளையும், அதன் வழிகளையும் கவனியுங்கள்- பாபா