azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The word Karma (action) is short and crisp. But the idea and ideals it conveys are of great significance to mankind. It is of two kinds: material and spiritual, Loukik (connected with this world) and Vaidik (drawn from the Vedas or scriptural injunctions). Karma that merely sustains life is material. The Vaidik elevates the human into the Divine and is based on the scriptures. Karma is not simply physical; it is also mental and verbal. Karma subsumes every activity of man—worldly, scriptural, the spiritual. All the three strands are, in truth, intertwined. The worldly actions entail merit or demerit. The scriptural actions are saturated with the experience of generations of good seekers. The spiritually focused will devote themselves to the cleansing of the heart so that the indwelling God may be reflected therein.
‘கர்மா’ என்ற வார்த்தை சிறியதும், சுருக்கமானதும் ஆகும். ஆனால், அது விளக்கும் சிந்தனையும், கொள்கையும், உலகிற்கே முக்கியமான ஒன்றாகும். இது இரண்டு வகைப் படும். ஒன்று ( லௌகீகம்) உலக சம்பந்தமானது, மற்றது வேதங்களிலிருந்து பெறப்பட்டது(வைதீகம்). வாழ்க்கையை மட்டும் சார்ந்திருக்கும் கர்மா உலகியலானது. வைதீக கர்மாவோ, வேதங்களின் அடிப்படையில் மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவது. கர்மா என்பது வெறும் உடலால் ஆற்றப் படும் செயல்கள் மட்டும் அல்ல; எண்ணம் மற்றும் வார்த்தைகளையும் குறிக்கும். உலகியலான, வேதங்களின் அடிப்படையிலான, மற்றும் ஆன்மீகமான எல்லா செயல்களிலும் கர்மா பரந்து விரிந்து உள்ளது. இந்த மூன்று இழைகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து உள்ளன. உலகியலான செயல்கள் உயர்வையோ, தாழ்வையோ அளிக்கும். வேதங்களின் அடிப்படையிலான செயல்களில், நல்லதை நாடும் சான்றோர்களின் பல தலைமுறைகளில் பெறப்பட்ட அனுபவங்கள் தோய்ந்திருக்கும். ஆன்மீகத்தைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள், தங்களது இதயங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதன் மூலம், அவற்றில் உள்ளுறையும் தெய்வீகத்தைப் பிரதிபலிக்கும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.