azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The ancient Rishis (sages), out of their own genuine experience, have clearly described the path to sanctify our lives. Their recommendation is not put together by reading and compiling from many books. According to them, in order to carry out the demands, the heavy schedule that Karma (Path of Action) imposes, you must have Bhakthi, Jnana and Yoga — Devotion, Wisdom and Self-Control. Dharma (Right Conduct) is the taproot of the great tree, religion. It is the eternal source of its strength. The tree is fed by waters of Bhakthi (Devotion). The leaves and flowers are renunciation and other virtues, and the fruit is Jnana (Wisdom). In these stages of growth, if there is any interruption or deficiency, that is to say even if any regulation is missed, then the fruit of wisdom or Jnana that the tree yields will be affected adversely. Hence remember this and have a disciplined and strict plan to be consistent in your practice and you will attain spiritual progress.
பண்டைய காலத்து முனிவர்கள், தங்களது உண்மையான அனுபவத்தின் மூலம், நமது வாழ்க்கையை புனிதப் படுத்தும் வழியினைத் தெளிவாக வகுத்துத் தந்துள்ளார்கள். அவர்களது அறிவுரைகள் புத்தகங்களைப் படித்தோ, நூல்களிலிருந்து தொகுத்தோ அளிக்கப் பட்டவை அல்ல. கர்மா நமக்கு ஏற்படுத்தும் பளுவான சுமையைத் தாங்க, நமக்கு பக்தி,ஞானம் மற்றும் யோகம் தேவை என்கிறார்கள் அவர்கள். மதம் என்ற ஆல மரத்தின் ஆணி வேர் தர்மம் ஆகும். அதுவே எப்போதும் நமக்கு சக்தி அளிக்கும் ஊற்று போன்றது.இந்த மரத்திற்கு இறைக்கப் படும் தண்ணீரே பக்தி. நற்குணங்களும் ,துறவு நிலையும் இதன் இலைகளும் ,பூக்களும் ஆகும்.ஞானமே இது அளிக்கும் பழம். இந்த மரத்தின் வளர்ச்சியின் பல கட்டங்களில், ஏதாவது தடை,குறை இருந்தாலோ அல்லது கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப் பட்டாலோ,இது அளிக்கும் ஞானப் பழம் பெரிதும் பாதிக்கப் படும். இதை மனதில் கொண்டு,உங்களது பயிற்சியை கண்டிப்பு மற்றும் கட்டுப் பாட்டுடனும் செய்து வந்தீர்களானால்,ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.