azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Guru Poornima is the day when you decide to become masters of your senses and intellect, emotions and passions, thoughts and feelings through Sadhana (spiritual discipline). Even during Dhyana (meditation), the ego will disturb you. Hence, offer yourself fully to God. This total dedication cannot emerge from scholarship. A scholar can be polluted by ego; he delights in putting pros and cons against each other; he raises doubts and disturbs faith, mixing the secular with the spiritual in order to extract worldly gain. But you must offer prayers to God to attain spiritual progress. Therefore, engage yourselves in Sadhana (spiritual practices) without delay. Cultivate virtues; be free from evil habits, thoughts, words and deeds. Grow in love and greet everyone with love. This is the way to Ananda (joy).
ஆன்மீக சாதனையின் மூலம், உங்களது புலன்கள், புத்தி, உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் எண்ணங்களின் அதிபதியாக வேண்டும் என்ற முடிவிற்கு, நீங்கள் வரும் நாள் தான் குரு பௌர்ணமி. தியானத்தின் போதும் கூட, அஹங்காரம் உங்களை நிலை குலையச் செய்யும். எனவே நீங்கள் முழுமையாக இறைவனிடம் சரணடையுங்கள். இப்படிப் பட்ட பரிபூரண சரணாகதி புலமையிலிருந்து வெளிப்படாது. கற்றறிந்த ஒருவர், அஹங்காரத்தினால் பாதிக்கப் படுகிறார்; நன்மை,தீமைகளை ஒன்றுக்கொன்று மோதச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்து , சந்தேகங்களை எழுப்பி, நம்பிக்கையைக் குலைத்து, தமது சுயலாபத்திற்காக , ஆன்மீகத்தையும், உலகியலானவற்றையும் குழப்பி விடுகிறார். ஆனால், நீங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக இறைவனைத் துதிக்க வேண்டும். எனவே, கால தாமதம் செய்யாது, ஆன்மீக சாதனையில் ஈடுபடுங்கள். எண்ணம்,செயல்,வாக்கு மற்றும் பழக்கங்களில் தீயவற்றைத் தவிர்த்து, நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் அன்புடன் இன்முகம் கூறி, அன்பில் வளருங்கள். இதுவே ஆனந்தத்திற்கான வழி.