azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Guru Poornima is dedicated for thanksgiving to the Guru, for, the Moon (the presiding deity of the mind) today is full, clear, cool and bright! He has no blemish or dullness that diminishes his glow. The Guru too is pictured and praised today as unblemished, bright and affectionate. He is tolerant and truly peaceful. He is the living example and embodiment of the virtues he desires us to develop. He removes the faults in vision and destroys the darkness of ignorance. He reveals the Aathma (Divinity) to the individual and makes him free. Hence Guru Poornima is dedicated to such Divine Gurus. In fact, God, the God within, is the Guru of Gurus. His Grace can make the blind see, the lame walk and the dumb speak. By a mere touch, He can demolish the sins of the past and create peace and joy. Vyaasa is the first Guru who demarcated the path and the goal. So he is associated with the Poornima (full moon) day.
குரு பௌர்ணமி குருவிற்கு நன்றி கூறும் முகமாக அர்ப்பணிக்கப் படுகிறது, ஏனெனில் மனதின் அதிபதியான சந்திரன் இன்று முழுமையாகவும், தெளிவாகவும், குளுமையாகவும் ப்ரகாசமாகவும் இருக்கிறான். அவனது ஒளியைக் குறைக்கும், குறைகளோ, மந்தமான நிலைகளோ இன்று இல்லை. குருவும் இன்று குறைகளே அற்றவராகவும், ப்ரகாசமானவராகவும், அன்பு நிறைந்தவராகவும்,உருவகப் படுத்தப் பட்டு,புகழப்படுகிறார். அவர் பொறுமையின் உருவாய் , உண்மையில் சாந்தமானவராகவும் இருக்கிறார். நம்மிடம் அவர் வளர்க்க விரும்பும் நற்குணங்களின் வடிவாக, வாழும் உதாரணமாகத் திகழுகிறார். நமது பார்வையில் உள்ள குறைகளை நீக்கி, அறியாமை என்ற இருளை அழிக்கிறார். ஆத்மாவை உணரச் செய்து விமோசனம் அளிக்கிறார். எனவே தான், குரு பௌர்ணமி இத்தகைய தெய்வீக குருவிற்கு அர்ப்பணிக்கப் படுகிறது. உண்மையில் நம்முள் உறையும் இறைவனே குருவுக்கு எல்லாம் குருவாக இருக்கிறான். அவனது கருணை குருடனைப் பார்க்க வைக்கும், முடவனை நடக்க வைக்கும், ஊமையைப் பேச வைக்கும். வெறும் ஸ்பரிசத்தினால், நமது பழைய பாவங்களைக் கரைத்து அமைதியையும்,ஆனந்தத்தையும் அவனால் அளிக்க இயலும். இந்த ஆன்மீகப் பாதையையும் அதன் இலக்கையும் வரையறுத்துவர் வியாச முனிவர். அதனால் தான் அவர் குரு பௌர்ணமியுடன் தொடர்புடயவராகப் பேசப் படுகிறார்.