azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There are four stages in the journey to God. They are Saalokya, Saameepya, Saaroopya and Saayujya. The first stage is Saalokya, which is coming to the Divine Presence. From thereon, you should progress forward to Saameepya, which means getting nearer to Guru. From there on, you march forward to Saaroopya where you shine with the very form and splendor of Divinity. Finally, you enter the stage of Saayujya, which is complete mergence with the Divine. At this stage, the bubble bursts and becomes one with the Sea. Seva (Service) gives you the opportunity to progress along each and every one of these steps and merge with God.
இறைவனை அடைவதற்கான வழியில் நான்கு நிலைகள் உள்ளன. அவையே சாலோக்யம், சாமீப்யம்,சாரூப்யம், மற்றும் சாயுஜ்யம். முதலில் சாலோக்யம்,அதாவது தெய்வீகத்திடம் வருவது. இதிலிருந்து, நீங்கள் சாமீப்யம் அதாவது குருவிற்கு அருகாமையில் செல்வது என்ற நிலையை நோக்கி முன்னேற வேண்டும். அங்கிருந்து நீங்களே அந்த தெய்வீகத்தின் உருவாகி ஒளிர்விடும் நிலையான சாரூப்யத்தை நோக்கி பீடு நடை போட வேண்டும். இறுதியில் நீங்கள் இறைவனுடன் ஒன்றரக் கலக்கும் நிலையான சாயுஜ்யத்தில் நுழைகிறீர்கள். இந்த நிலையில் நீர்க்குமிழி உடைந்து, கடலுடன் ஒன்றரக் கலந்து விடுகிறது. தன்னலமற்ற சேவையே இந்தப் பாதையில் ஒவ்வொரு நிலையிலும் முன்னேறும் வாய்ப்பினை அளித்து இறைவனுடன் ஒன்றரக் கலந்து விட உதவுகிறது.