azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

For success in any aspect of life, knowledge, skill and balance are essential. If you combine knowledge with skill, you will get balance. Balance is very important. It means maintaining equipoise in the face of praise and criticism. To stay balanced, skill is necessary. If you lose balance, suffering will soon follow. When you are given some work, you should put your heart and soul into it, and do it with utmost sincerity and dedication, to the limit of your capacity. Take for example, a person who is entrusted with planting trees and developing a garden. If he does the work wholeheartedly without getting affected by praise or blame, the plants will come up well, and the garden will get transformed into a place of great beauty. When the Guru comes to see that garden and feels happy with the condition of the plants, the joy of the Guru becomes the Grace He bestows on that individual, and the Grace will confer great happiness on that individual.
வாழ்க்கையில் எந்தத் துறையிலும் வெற்றி அடைவதற்கு, அறிவு, திறமை , மற்றும் சமநிலை மிகவும் அவசியம். அறிவும், திறமையும் கலந்திருந்தால், உங்களுக்கு சமநிலை கிடைக்கும். சமநிலை மிகவும் முக்கியமானது.இதன் பொருள்,புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும்,ஒரே மனநிலை கொண்டிருப்பதே. சமநிலையில் இருப்பதற்குத் திறமை தேவை. சமநிலையை இழந்தால்,துயரம் பின் தொடரும். உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப் பட்டால், அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, உங்களது சக்தியின் முழு அளவிற்கு, பக்தியுடனும்,சிரத்தையுடனும் அதை ஆற்றுங்கள். உதாரணத்திற்கு, ஒருவருக்கு, செடிகளை நட்டு, ஒரு தோட்டத்தை உருவாக்கும் பணி கொடுக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். புகழ்ச்சியாலோ, இகழ்ச்சியாலோ பாதிக்கப் படாது,அவர் முழு மனதுடன் பணி ஆற்றினால், அந்தச் செடிகள் நன்கு வளர்ந்து, அந்தத் தோட்டமே மிகுந்த நேர்த்தி நிறைந்த இடமாக மாறி விடும். எப்போது குருவானவர் ,அந்தத் தோட்டத்தைக் காண வந்து , அந்தச் செடிகளின் நிலைமையைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறாரோ,குருவின் அந்த ஆனந்தமே அவரது அருளாக உருவாகி, அந்த மனிதருக்கு பேரானந்தத்தை அளிக்கும்.