azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All work should be done in the spirit of offering to God. One should not be idle. Whatever work one does, it should be done with a feeling of love. You can take up any work that is appropriate in keeping with your aptitudes and capacity. While doing such sacred work, you must carry on with worshipping your favourite form of the Divine. People say that many obstacles occur while performing Sadhana (spiritual practices). When obstacles come, they should be taken as tests. Tests are intended not as punishment, but for ascertaining one's fitness for promotion. Frequent tests mean frequent opportunities for promotion. If there is a big time lag between tests, it only means that promotion is not possible for a long time. One must face the obstacles in one’s Sadhana in this spirit and try to overcome them.
அனைத்து வேலைகளையும், இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் உணர்வோடு செய்ய வேண்டும்.சோம்பேறித் தனமாக இருக்கக் கூடாது. எந்த வேலை செய்தாலும் , ப்ரேமை உணர்வோடு செய்ய வேண்டும். உங்களது திறமை மற்றும் மனப்பாங்குக்கு ஏற்ற எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யுங்கள். இப்படிப்பட்ட புனித கடமை ஆற்றும் போது, உங்களது இஷ்ட தெய்வத்தை ப்ரார்த்தித்துக் கொண்டே செய்யுங்கள். ஆன்மீக சாதனை செய்யும் போது பல தடங்கல்கள் வருவதாகச் சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட தடங்கல்களை, நமக்கு வைக்கப் படும் பரீக்ஷைகளாகக் கருதுங்கள். பரீக்ஷைகள் நமக்கு இடப்படும் தண்டனைகள் அல்ல; நமக்கு உயர் பதவி அளிப்பதற்கான தகுதி இருப்பதைக் கண்டறிவதற்கே. அடிக்கடி பரீக்ஷைகள் வருவது, படிப்படியாக பதவி உயர்வுகள் பெறுவதற்கான வாய்ப்புக்களே. பரீக்ஷைகளுக்கு இடையில் நீண்ட கால இடைவெளி இருந்தால், பதவி உயர்வு கிடைப்பதற்கும் நீண்ட காலம் பிடிக்கும் என்று பொருள். ஆன்மீக சாதனையில் வரும் தடங்கல்களை இந்த உணர்வோடு எதிர் கொண்டு, அவற்றை வெல்ல முயற்சிக்க வேண்டும்.