azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In the olden days even before imparting knowledge to his disciples the Guru (preceptor) would assign them different tasks that they had to perform in his hermitage. This was done with a purpose. One important object of work is purification of the chittha (heart). Once the heart is purified one is ready to receive the teachings of the Guru. Thus in this manner the Guru first purified the heart of the disciple and only when he was satisfied with the disciple's spiritual progress did he start imparting Self-Knowledge. (Divine Discourse, July 7, 1985.)
LOVE MUST EXPRESS ITSELF AS SERVICE. – BABA
பண்டைய காலங்களில், தனது சீடர்களுக்கு அறிவை அளிப்பதற்கு முன்னரே, குருவானவர், அவரது ஆசிரமத்தில் அவர்கள் ஆற்ற வேண்டிய வெவ்வேறு பணிகளை ஒதுக்கி அளிப்பார். இது ஒரு குறிக்கோளுடன் செய்யப் பட்டது. ஒரு முக்கியமான பணி சித்தத்தை ( இதயத்தை) சுத்திகரிப்பதாகும்.ஒரு முறை இதயம் பரிசுத்தமாகி விட்டால், ஒருவர் குருவின் போதனைகளை ஏற்பதற்குத் தயாராக ஆகி விடுவார். இவ்வாறு, குருவானவர், சீடரின் இதயத்தைப் பரிசுத்தப் படுத்தி விட்டு, அவர் சீடரின் ஆன்மிக முன்னேற்றத்தால் திருப்தி அடைந்தால் மட்டுமே, அவருக்கு ஆத்ம ஞானத்தைப் போதிக்க ஆரம்பிப்பார்.
ப்ரேமை, சேவையின் மூலம் தன்னை
வெளிப்படுத்த வேண்டும் -பாபா