azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

As a spiritual education (Balavikas) teacher, you should regard imparting spiritual education as a great opportunity and a sacred task. You should make every attempt to teach the students with love, forbearance and with a pure heart. You should overcome laziness. You must treat all the children who come to you with more affection than you show to your own children. Gurus must have equal-mindedness and should not discriminate against anyone on the basis of caste, religion or such other aspects. You should inculcate the idea of service in the minds of the children. You should teach them that whenever they eat, they should offer the food to God first. You should also teach the children to conduct themselves with humility when they meet their elders. As a teacher, you should not be egoistic. When there is ego, you cannot be a good Guru. Therefore, you must make every attempt to be free of ego, to learn your responsibility and do your duty.
பாலவிகாஸ் குருவாக இருக்கும் நீங்கள்,ஆன்மீகக் கல்வியை கற்பிப்பதை,ஒரு சிறந்த வாய்ப்பாகவும்,புனிதமான கடமையாகவும் கருத வேண்டும். மாணவர்களுக்கு அன்பு,பொறுமை மற்றும் தூய இதயத்துடன் கற்றுக் கொடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தை வெல்ல வேண்டும். உங்களிடம் கற்க வரும் குழந்தைகளிடம்,உங்கள் குழந்தைகளிடம் காட்டும் நேசத்தை விட அதிக நேசத்தைக் காட்ட வேண்டும். குருமார்கள் சமமான மனநிலையைக் கொண்டு, எவரையும் ஜாதி, மத அல்லது மற்ற அடிப் படையில் வேற்றுமைப் படுத்திப் பாராது நடத்த வேண்டும். குழந்தைகளின் மனதில் சேவை மனப்பான்மையை பதியச் செய்ய வேண்டும். எப்போது சாப்பிடுவதற்கு முன்பும், அந்த உணவை முதலில் இறைவனுக்கு அற்பணம் செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மூத்தவர்களைச் சந்திக்கும் போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். குருமார்களான உங்களுக்கு, அஹங்காரம் இருக்கக் கூடாது. அஹங்காரம் இருந்தால் நல்ல குருவாக இருக்க முடியாது. எனவை, அகந்தையை விடுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து, உங்களது பொறுப்பை உணர்ந்து, கடமையை ஆற்ற வேண்டும்.