azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Once born, death is the inevitable end. But it is possible to escape birth and thereby also death. For birth is the consequence of Karma (action). Engage in activity as your duty requires and as an offering to God. Then you will neither be elated at success or disheartened by failure, for He prompts, He helps, He grants joy or grief as He wills. The doer will have no attachment to the fruit of the deed, so he will not be bound to its consequence; it will leave no trace on his personality to affect him beyond death. (Divine Discourse, July 18, 1970.)
DOING ONE’S DUTY SINCERELY IS THE HIGHEST SPIRITUAL ENDEAVOUR. – BABA
ஒரு முறை பிறந்து விட்டால், மரணம் என்பது தவிர்க்க முடியாத முடிவாகும். ஆனால், பிறப்பிலிருந்து தப்பிக்க முடியும்; அதன் மூலம் இறப்பிலிருந்தும். ஏனெனில் பிறப்பு என்பது கர்மாவின் விளைவால் ஏற்பட்டதே. உங்களது கடமைக்குத் தேவையான பணியை, இறைவனுக்கு ஒரு அர்ப்பணிப்பாக ஆற்றுங்கள். அவனே உந்துதல் அளித்து, அவனே உதவி, அவனது சங்கல்பத்தின் படி சந்தோஷம் அல்லது துக்கத்தை அளிப்பதால், பின்னர் நீங்கள் வெற்றியைக் கண்டு துள்ளவோ அல்லது தோல்வியைக் கண்டு துவளவோ மாட்டீர்கள்; பணி ஆற்றுபவர், தனது பணியின் பலனின் மீது எந்த பற்றுதலும் கொண்டு இருக்க மாட்டார்; அதனால் அந்த விளைவால் கட்டுண்டு இருக்க மாட்டார்; அது அவனது தனித்தன்மையில், இறப்பிற்குப் பிறகு பாதிக்கும் அளவிற்கு எந்த சுவடையும் விட்டுச் செல்லாது.
ஒருவரது கடமையை சிரத்தையாக ஆற்றுவதே
தலை சிறந்த ஆன்மிக சாதனையாகும் - பாபா