azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The true Guru is like an ophthalmic surgeon. The ophthalmologist cures cataracts by removing the clouded film in the patient's eye and thus restores his vision. The true Guru will also remove the veil of ignorance and attachment that blurs the vision of the disciple and thus restore their natural spiritual vision. Only when you cleanse your heart by removing ignorance, sorrow, worry, greed, and envy, can you realize the fullness of your Reality. Celebrate the day when your mind is rid of the darkness of ignorance and achieves fullness of illumination.
உண்மையான குரு என்பவர் கண் மருத்துவர் போன்றவர். நோயாளியின் கண்ணில் உள்ள ‘காடராக்ட்’ டை, கண் மருத்துவர் பனி படர்ந்த திரையை எடுத்து விடுவதன் மூலம் குணப்படுத்தி,, அவருக்கு பார்வையை திரும்ப அளிக்கிறார். உண்மையான குருவும், சீடரின் பார்வையை மறைக்கும், அறியாமை மற்றும் பற்றுதல் என்ற திரையை நீக்கி, அவருக்கு இயல்பான ஆன்மீகப் பார்வையை அளிப்பார். எப்போது நீங்கள், உங்கள் இதயங்களிலிருந்து அறியாமை, துயரம், கவலை, பேராசை, மற்றும் பொறாமையை நீக்குகிறீர்களோ, அப்போது தான், உங்களது முழுமையான ஆத்ம நி¨லையை உணர முடியும். மனதிலிருந்து அறியாமை என்ற இருளைப் போக்கி, முழுமையான ஆன்மீக ப்ரகாசத்தைப் பெறும் நாளைக் கொண்டாடுங்கள்.