azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you must realize that the relationship between you and God is permanent, and is beyond the limitations of time and space. You should not waste your life thinking only of the physical relationship. The body is a passing thing. What you see externally is a burden. When you have made it a part of yourself it ceases to be a burden. It is like the food that a traveller carries on his shoulders for consumption on the way. As long as the food remains outside it is a burden. But when he has eaten it, he gets stronger and there is no burden on his shoulder. You must safeguard the Divinity you experienced and magnify it by contemplating on it internally. You should concentrate on the attainment of union with the Divine, which is permanent and beyond the limitations of time and space.
நீங்கள் அனைவரும், உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள சம்பந்தம் நிலையானது மற்றும் கால,தேச பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை கட்டாயம் உணர வேண்டும். உடல் மீதான சம்பந்தங்களை எண்ணிக் கொண்டே உங்கள் வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. உடல் கலைந்து விடக் கூடிய ஒன்று. வெளி உலகில் நீங்கள் காண்பதெல்லாம் சுமைகளே. எப்போது அவற்றை நீங்கள் உங்களின் அங்கங்களின் ஒன்றாக ஆக்கிக் கொள்ளுகிறீர்களோ, அப்போதே , அது சுமையற்றதாக ஆகி விடுகிறது. இது ,ஒரு வழிப் போக்கர் தான் அன்று சாப்பிடுவதற்கான உணவை, தன் தோள்களில் சுமந்து செல்வதற்கு ஒப்பானது. அந்த உணவு வெளியில் இருக்கும் வரை அது ஒரு சுமையாகவே தோன்றும். ஆனால் அதை அவன் சாப்பிட்டபிறகு, அவன் வலிமை உள்ளவனாக மாறி விடுவதால், அவனது தோள்களில் சுமை இருப்பதில்லை. நீங்கள் அனுபவித்த தெய்வீகத்தைப் பேணிக் காத்து, அதை உள் மனதில் சதா சிந்திப்பதன் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும். நிலையானதும்,கால,தேச பரிமாணங்களுக்கு அப்பாற் பட்டதான அந்த தெய்வீகத்துடன் இணைவதில், நீங்கள் ஒரு முனைப்புடன் இருக்க வேண்டும்.