azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Upaasana means approaching near the Divine. Upaasana is often equated with fasting. This is not correct. When one is immersed in the bliss of Brahma-ananda (divine bliss of rapture), one gives up food of one's own accord. This constitutes true Upaasana. To subject oneself to fasting as a compulsory regimen is not Upaasana, but mere starvation. For instance, to keep awake on Shivaraathri night by watching films or playing cards is a caricature of the sacred vigil that one is expected to observe at that time. The experience of Divine Bliss is not to be achieved by the mastery of various spiritual practices. It is only when the heart is purified that divinity can be realized. There is no room for divinity in a heart filled with egoism, pride and hatred.
‘உபாஸனை’ என்றால் இறைவனுக்கு அருகாமையில் செல்வது என்று பொருள். ‘உபாஸனை’ என்றால், பொதுவாக பட்டினி கிடப்பது என்று நினைக்கிறார்கள். பிரம்மானந்தத்தில் ஒருவர் திளைத்திருந்தால், தானாகவே உணவு உட்கொள்வதை விட்டு விடுவர். இதுவே உண்மையான ‘உபாஸனை’. தம்மை கட்டாயமாக சாப்பிடாமல் வருத்திக் கொள்வது, வெறும் பட்டினி கிடப்பதே. உதாரணமாக,சிவராத்திரி இரவு செய்ய வேண்டிய புனிதமான விழித்திருப்பதை, சினிமா பார்த்துக் கொண்டும், சீட்டு விளையாடியும் கழிப்பது ஒரு கேலிச் சித்திரமாகும். பல விதமான ஆன்மீக சாதனைகளைத் திறமையாக செய்வதன் மூலம்,பேரானந்தத்தை அனுபவிக்க இயலாது. எப்போது இதயம் தூய்மை அடைகிறதோ,அப்போது தான் தெய்வீகத்தை உணர முடியும். அஹங்காரம், கர்வம் மற்றும் த்வேஷம் நிறைந்த இதயத்தில் தெய்வீகத்திற்கு இடமே இல்லை.