azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Your attitude to God should not be dependent on likes and dislikes. There are some devotees who worship God with devotion for some time. Then they turn against God. The reasons for these changes in attitude are traceable to their expectations from God. When they feel that their prayers are being answered and their desires are being fulfilled, they adore Him. But when their wishes are not fulfilled, they revile God in all sorts of words. This kind of devotion is based on self-interest and has nothing divine about it. One should not blame God for one’s difficulties. Pure devotion will not be affected by changes in circumstances or fortunes. True love is not based on any conditions. It is equal in joy and pain and is not affected by fluctuations in fortune.
இறைவனைப் பற்றிய உங்களது மனப்பாங்கு, விருப்பு, வெறுப்புகளைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. சில பக்தர்கள் பக்தியுடன் இறைவனை சிறிது காலம் வழிபடுவார்கள். பிறகு கடவுளுக்கு எதிரிகளாக மாறிவிடுவார்கள். அவர்களது இந்த மனப்பாங்கின் மாற்றத்திற்குக் காரணம், இறைவனிடமிருந்து அவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்புக்களே. தங்களது பிரார்த்தனைகளுக்கு விடை கிடைத்தாலோ, தங்களது விருப்பங்கள் பூர்த்தி செய்யப் பட்டாலோ,அவர்கள் இறைவனைப் போற்றுவார்கள். அவர்களது விருப்பங்கள் நிறைவேறா விட்டால், பல விதமான வார்த்தைகளால் அவனைத் தூற்றுவார்கள். இப்படிப்பட்ட பக்தி சுயநலத்தின் அடிப்படையில் அமைந்தது; சிறிது கூட தெய்வீகத் தன்மை அற்றது. தங்களது இன்னல்களுக்கு இறைவனைத் தூற்றக் கூடாது. தூய்மையான பக்தி ,சூழ்நிலை மற்றும் செல்வச் செழிப்பில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப் பட மாட்டாது. உண்மையான அன்பு , நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது இன்பத்திலும்,துன்பத்திலும் சமனாகவும், வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் படாமலும் இருக்கும்.