azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If you view the world with love, it will appear as filled with love. If you view it with hatred, everything will appear antagonistic to you. Eyes filled with love shine with brightness and cheerfulness. Eyes filled with hatred appear bloodshot and fearful. Your thoughts determine your actions - good or bad. The external world will reflect your thoughts. You must consider the entire universe as a temple of God. You must regard all that is beautiful and great in Nature - the lofty mountains, the vast oceans, the stars in the sky - as proclaiming the glory and power of the Divine. The sweet fragrance of flowers, the delectable juice of fruits should also be regarded as tokens of God's love and compassion.
நீங்கள் இந்த உலகை அன்புடன் நோக்கினால், அது அன்பால் நிறைந்ததைப் போலத் தோன்றும். அதை வெறுப்புடன் நோக்கினால் , அனைத்தும் நமக்கு எதிரியைப் போலத் தோற்றமளிக்கும். அன்பு நிறைந்த கண்கள் பிரகாசமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் ஒளிர் விடும். வெறுப்பு நிறைந்த கண்கள் சிவந்தும், பயம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்களது எண்ணங்களே உங்களது, நல்ல அல்லது தீமையான செயல்களை முடிவு செய்கின்றன. வெளி உலகம் உங்களது எண்ணங்களையே பிரதிபலிக்கும். இந்த பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனது கோவிலாகக் கருதுங்கள். உயர்ந்த மலைகள், பரந்த கடல்கள், வானத்து விண்மீன்கள் போன்ற இயற்கையில் அழகும் , மேன்மையும் நிறைந்த அனைத்தும், இறைவனது பெருமைக்கும் சக்திக்கும் கட்டியம் கூறுகின்றன என்று கொள்ளுங்கள். மலர்களின் இனிய நறுமணம் , மகிழ்வு தரும் பழச்சாறுகள், இறைவனது கருணை மற்றும் அன்பின் அடையாளங்களே.