azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Believe firmly that everything is rendered holy by His Name. Do not reject Him; cultivate Prema (love) for the Lord. It has infinite potentiality. An iron chain can be broken with ease, but not the chain of love that binds you to the Lord! Even the cruelest of animals is overpowered by love. Do not mistake this temporary abode as your eternal dwelling place. Do not lose heart at evanescent troubles and short-lived tragedies. Immerse yourselves in the effort to attain the eternal Lord. The Lord will never give you up.
அனைத்தும் இறை நாமத்தால் புனிதமடைகின்றன என்பதை உறுதியாக நம்புங்கள். இனைவனைத் தள்ளி வைக்காதீர்கள்; அவனிடம் ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு அளவற்ற சக்தி உள்ளது. இரும்புச் சங்கிலியைக் கூட எளிதாக அறுத்து விடலாம் ஆனால் உங்களை இறைவனுடன் பிணைக்கும் அன்புச் சங்கிலியை அறுக்க இயலாது! கொடூரமான விலங்குகளைக் கூட அன்பினால் கட்டுப் படுத்த முடியும். தாற்காலிகமான இந்த வாழ்க்கையை, தவறாக உங்களது நிரந்தர இருப்பிடமாகக் கருதாதீர்கள். மறைந்து விடக்கூடிய துன்பங்களையும், தாற்காலிகமான துயரங்களையும் கண்டு தைரியத்தை இழந்து விடாதீர்கள். நிரந்தரமான இறைவனை அடையும் முயற்சியில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இறைவன் உங்களை ஒரு போதும் கை விட மாட்டார்.