azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a long journey through time, and religion confers peace for the present and encouragement for the future. We must believe that we are at present undergoing the consequences of our own activities in the past. It will be a great source of peace and encouragement when people can be content with their present conditions because they know they themselves were the cause and know that if one does good and meritorious deeds now, it is possible to build a happy future. It is only when life is run on these two lines that morality and self-control can have a place in life. The power to adhere to these two ideals consists in the encouragement and the enthusiasm given by religion.
வாழ்க்கை என்பது காலத்துடன் ஊடுருவிய ஒரு நீண்ட பயணம்; மதம் நிகழ் காலத்தில் அமைதி அளிப்பதுடன் , வருங்காலத்திற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது. நாம் தற்சமயம் அனுபவிக்கின்ற அனைத்தும் ,நமது கடந்த காலச் செயல்களின் விளைவுகளே என்பதை கண்டிப்பாக உணர வேண்டும். தம்முடைய தற்கால நிலைமையில் மனத் திருப்தி உள்ளவர்களாக மனிதர்கள் இருக்க முடிந்தால், அதுவே அமைதி மற்றும் ஊக்கத்தின் உறைவிடமாகத் திகழும்;ஏனெனில் அதற்குத் தாங்களே காரணம் என்பதையும்,தற்காலத்தில் நல்ல மற்றும் புகழ் அளிக்கத் தக்க செயல்களைச் செய்தால், மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். வாழ்க்கை என்பது இந்த இரண்டு வழிகளில் நடத்தப் பட்டால் மட்டுமே ,நன்னடத்தை மற்றும் கட்டுப்பாடு என்ற இரண்டும் வாழ்க்கையில் இடம் பெற இயலும். இந்த இரண்டு கோட்பாடுக்களைக் கடைப் பிடிப்பதற்கான சக்தி மதம் அளிக்கின்ற ஊக்கம் மற்றும் உற்சாகத்தில் இருக்கிறது.