azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not entertain in your mind the idea of purity or impurity while undertaking a spiritual practice. There is nothing impure in the world. When the Lord is immanent everywhere and in everything, how can anything be impure? Even if something appears to the eyes as impure, the moment it contacts the Name of the Lord, it becomes purified. Purity and impurity are the result of the mental reactions at a particular moment. When one is giving money to someone, one talks of choosing an auspicious time. But when one gets a chance to take money, every moment becomes auspicious! The mind is the reason for both the attitudes. Remember that everything is pure, everything is Divine.
ஆன்மீக சாதனை செய்யும் போது, இது தூய்மையானது,இது தூய்மையற்றது என்ற எண்ணங்களுக்கு உங்கள் மனதில் இடமளிக்காதீர்கள். இந்த உலகில் தூய்மையற்றது என்று எதுவுமே இல்லை. இறைவன் எங்கும், எதிலும் நிறைந்திருக்கும்போது, எப்படி எதுவும் தூய்மையற்றதாக இருக்க முடியும்? ஒருவேளை ஏதாவது ஒன்று, உங்கள் பார்வைக்குத் தூய்மையற்றதாகத் தோன்றினாலும், அது இறைவனது நாமத்தோடு இணையும் போது, புனிதமடைந்து விடுகிறது. தூய்மையானது, தூய்மையற்றது என்பது எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதில் ஏற்படும் கலக்கம் தான். ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். அதுவே,பணம் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எல்லா நேரமும் நல்ல நேரமாகி விடுகிறது ! இந்த சுபாவத்திற்கு மனம் தான் காரணம். அனைத்தும் தூய்மையானவையே, தெய்வீகமானவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.