azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You are overly concerned about your body. It is just a water bubble. The mind is a bundle of thoughts. Hence, one should not lead one's life reposing one’s entire faith in the body and mind. In today's world, righteousness has declined and the whole world is filled with injustice, indiscipline, and evil behaviour. In such a chaotic situation, faith in God is the only lasting remedy. Love God to receive the gift of love from God. Truth is the only refuge, for truth is God. Love is God, live in Love. (Divine Discourse, August 9, 2006.)
THERE IS NO NOBLER QUALITY IN THE WORLD THAN LOVE. IT IS WISDOM. IT IS RIGHTEOUSNESS. IT IS WEALTH. IT IS TRUTH. – BABA
நீங்கள் உங்கள் உடலைப் பற்றி அளவுக்கு மீறிக் கவனம் எடுத்துக் கொள்கிறீர்கள். அது வெறும் ஒரு நீர்க்குமிழியே. மனம், சிந்தனைகளின் ஒரு மூட்டையே. எனவே, ஒருவர் தனது அனைத்து நம்பிக்கையையும் உடல் மற்றும் மனத்தின் மீது வைத்து வாழ்க்கை நடத்தக் கூடாது. இன்றைய உலகில் தர்மம் குறைந்து விட்டது; உலகனைத்தும் அநீதி, ஒழுங்கின்மை மற்றும் தீய நடத்தை ஆகியவைகளால் நிரம்பி உள்ளது. இப்படிப் பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில், இறை நம்பிக்கை ஒன்றே நிலையான நிவாரணமாகும். இறைவனிடமிருந்து ப்ரேமை எனும் பரிசைப் பெற அவனை நேசியுங்கள். சத்யமே இறைவன் என்பதால், சத்யம் மட்டுமே ஒரே அடைக்கலம். ப்ரேமையே இறைவன், ப்ரேமையில் வாழுங்கள்.
அன்பை விட சீரிய குணம் இந்த உலகில் எதுவும் இல்லை. அன்பே ஞானம். அன்பே தர்மம். அன்பே செல்வமும், சத்தியமும் ஆகும் - பாபா