azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not crave for the fruit the moment the sapling is planted! Do not pluck and chew the leaves and the twigs in the hope of inferring therefrom the taste of the fruit. If you do so, you cannot enjoy the sweetness of the fruit; besides, the plant itself will not survive. Similarly, your task is to simply cultivate the sapling called Nama (Name of God). While doing so, do not doubt and examine whether it has the glory ascribed to it. Without fail, that sapling will grow into a tree and give you the fruit you hope to eat. You can achieve it. Believe firmly that the Name is capable of yielding that fruit!
செடியை நட்டவுடனேயே அதன் பழம் வேண்டும் என்று ஏங்காகாதீர்கள். அதன் இலைகளையும்,கிளைகளையும் ஒடித்து,அவற்றைச் சுவைப்பதால் அதன் மூலம், பழத்தின் சுவையை அனுபவிக்க முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால், அதன் பழத்தின் இனிமையையும் சுவைக்க இயலாது; அந்த செடியும் பிழைக்காது.அது போல,உங்களது கடமை நாமஸ்மரணை என்ற செடியை வளர்ப்பது தான்.அவ்வாறு செய்யும் போது,அந்த நாமத்தின் பெருமையை சந்தேகப் படுவதையோ,அதை ஆராய்வதையோ செய்யாதீர்கள். தவறாமல், அந்தச் செடி வளர்ந்து, மரமாகி, நீங்கள் சாப்பிடலாம் என்று எதிர்பார்த்த பழத்தை அளிக்கும். உங்களால் அதை சாதிக்க இயலும்.அந்த இறை நாமம் அந்த பலனை அளிக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்.