azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who have the inner urge to achieve the higher wisdom that confers liberation have, therefore, to reflect upon and investigate the phenomenon of death. Death should arouse no fear. It should not be regarded as inauspicious. You should not run away from the problem, imagining that death happens only to others, and that it will not happen to you. Neither should you postpone reflections on death, judging that they are inappropriate now, and profitless. For inquiry into death is really inquiry into one’s own Reality. This truth has to be recognised.
மோக்ஷத்தை அருள வல்ல,உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்கள், இறப்பு என்ற நிகழ்வைப் பற்றி ஆராய வேண்டும். இறப்பு என்பது எந்த விதமான பயத்தையும் ஏற்படுத்தத் தேவை இல்லை. அது அமங்கலகரமான ஒன்று என்றும் கருதக் கூடாது. இறப்பு என்பது எனக்கு இல்லை, அது மற்றவர்களுக்குத் தான் நிகழும் என்று கற்பனை செய்து கொண்டு, பிரச்சனையிலிருந்து,ஓடக் கூடாது. தற்சமயத்திற்கு ஏற்றதும் அல்ல, மேலும் பலனளிப்பதும் அல்ல என்று கருதி இறப்பைப் பற்றிய சிந்தனையைத் தள்ளிப் போடக் கூடாது. ஏனெனில்,இதைப் பற்றிய ஆய்வு, நமது உண்மையான நிலையைப் பற்றிய ஆய்வாகும். இந்த சத்தியத்தை கட்டாயம் உணர்தல் வேண்டும்.