azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Friendship is very important. When somebody salutes you, you should also salute him or her. Do not consider that since somebody is your enemy, you should not salute him. Consider everyone to be your friend. Do not bear hatred or enmity towards anyone. Enmity is a wicked quality. Everyone should be united. If you really want to see God, first see Him in everyone. You may earn any amount of money, but as long as you are alive, you should give joy to others by undertaking acts of charity. Those who have wealth should look after poor and sick people. Utilize all your earnings in a proper manner. Consider social service as service to yourself. Service to society is a sign of nobility. On the contrary, those who do not take the path of service are wicked.
நட்புணர்வு மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர் உங்களுக்கு வணக்கம் தெரிவித்தால்,நீங்களும் அவருக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். ஒருவர் உங்களுக்கு எதிரி என்பதால் அவரை வணங்கக் கூடாது என்று கருதாதீர்கள். அனைவரையும் உங்களது நண்பர்களாக எண்ணுங்கள்.எவர் மீதும் வெறுப்பையோ,பகைமையோ கொள்ளாதீர்கள்.பகைமை ஒரு தீய குணம்.அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.நீங்கள் இறைவனைக் காண வேண்டும் என்றால், முதலில் அவனை, அனைவரிடமும் காணுங்கள். நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால், உங்கள் வாழ்நாள் முழுவதும்,கருணையுடன் உதவிப் பணிகளைச் செய்து, பிறருக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.செல்வம் படைத்தவர்கள்,ஏழைகளையும்,நோயுற்றவர்களையும் பேணிக் காக்க வேண்டும்.நீங்கள் ஈட்டிய செல்வத்தை சரியான வழியில் பயன்படுத்துங்கள். சமூக சேவையை, உங்களுக்கே ஆற்றப் படும் சேவையாகக் கருதுங்கள்.சமூகத்திற்கு ஆற்றப்படும் சேவை,உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான சின்னமாகும். மாறாக,சேவைப் பாதையில் செல்லாமல் இருப்பவர்கள் தீயவர்களே.