azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Education denotes Vidya, which is the Knowledge of the Self. This is the foundation of education. Students should acquire sacred education, beginning with thoughts of God. Even an illiterate driver in India, salutes the steering wheel before he starts the vehicle. Similarly, a musician offers salutation to the musical instrument, before playing on it. Thus, all type of learning should begin with the name of God and prayer to Him, and every activity should be done as an offering to God, without any artificiality and ostentation. Degrees acquired without the essence of education, are only pieces of paper. Students must have a pure and sacred heart and the goodness of education should be reflected on their faces. In fact, every individual should be imbued with divine feelings.
கல்வி என்பது ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை அளிப்பதால் ‘வித்யா’ எனப்படுகிறது. இதுவே கல்வியின் அடித்தளமாகும். மாணவர்கள் இறை எண்ணங்களுடன் தொடங்கி, புனிதமான கல்வியைப் பெற்றிட வேண்டும். இந்தியாவில்,படிக்காத டிரைவர் கூட தனது வண்டியை இயக்குவதற்கு முன்பு அதன் ஸ்டியரிங் வீலைத் தொட்டு வணங்குகிறான்.அதே போல,ஒரு இசைக் கலைஞனும் , தனது இசைக் கருவியை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பு அதற்கு வந்தனம் செலுத்துகிறான். எனவே,எல்லாவிதமான கல்வியையும் இறை நாமம்,மற்றும் இறை வந்தனையுடன் தான் தொடங்கவேண்டும்;அதே போன்று ஒவ்வொரு செயலையும்,செயற்கை மற்றும் ஆடம்பரமின்றி, இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்திட வேண்டும். கல்வியின் உண்மையான சாரமின்றிப் பெறப்படும் பட்டங்கள் அனைத்தும் வெறும் காகிதத் துண்டுகளே.மாணவர்கள் தூய்மையான மற்றும் புனிதமான இதயம் கொண்டவர்களாக இருப்பதோடு, கல்வியின் நற்குணங்கள் அவர்களது முகங்களில் பிரதிபலிக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் தெய்வீக உணர்வுகள் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.